40 நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குக் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமி - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..

மக்களின் வேண்டுகோளை ஏற்று 40 நாட்களுக்குப் பிறகு கோவில் யானை கொண்டுவரப்பட்டது. இதை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

40 நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குக் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமி - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..
40 நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குக் கொண்டுவரப்பட்ட யானை.
  • Share this:
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானை லட்சுமியின் மீது மிகுந்த பிரியம் கொண்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் காட்டுயானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளுக்கு வனம் போன்ற பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானையை குறுகிய இடத்தில் வைத்துள்ளனர். கல்லில் நிறுத்தப்படுவதால் யானையின் காலில் வலி ஏற்பட்டுள்ளது எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த ஜூன் 8-ஆம் தேதி யானை லட்சுமி குருமாம்பேட்டில் உள்ள வனம் போல காட்சியளிக்கும் காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

பக்தர்கள் மீண்டும் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். வனப் பகுதியில் பாம்பு, தேள் போன்றவை உள்ளதால் யானைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வந்தனர். இது தொடர்பாக வாட்ஸ்அப்பில் வீடியோவும் பரவியது. இந்நிலையில் யானை லட்சுமியை கோவிலுக்குக் கொண்டுவரவும், உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கவும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.


Also read: ரயில்வேயில் 50% பணியிடக் குறைப்பு தொடங்கியது.. குறைக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இதனடிப்படையில் 40 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 7.30 மணிக்கு வேளாண் அறிவியல் மையத்திலிருந்து யானை லட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. எம்எல்ஏ-க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன் மற்றும் பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமிக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் யானை லட்சுமி சுமார் 7 கிமீ நடத்தி அழைத்து வரப்பட்டது. அதற்கு ஆங்காங்கே பக்தர்கள் பழங்களைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பலர் அதனுடன் நடந்தே வந்தனர். நேரு வீதி வழியாக யானை லட்சுமி வந்தபோது மேளதாளங்களுடனும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மணக்குள விநாயகர் கோவிலுக்கு சுமார் 10.30 மணிக்கு யானை லட்சுமி வந்தது. அங்கு மணக்குள விநாயகரை வணங்கிய யானை கோவிலை வலம் வந்தது. அங்கு அதற்கு பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்,  முதலமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏ-க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், ஜான்குமார் மற்றும்  பலர் பங்கேற்றனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading