புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்வு...!

புதுச்சேரி

100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு முன்பு 1 ரூபாய் 50 காசுகள் வசூலித்து வந்த நிலையில் தற்போது 1 ரூபாய் 55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  புதுச்சேரியில் மின்சார கட்டணம் யூனிட்டிற்கு 5 காசுகள் முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் புதுச்சேரி மின்சாரத் துறை கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

  அதன்படி 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு முன்பு 1 ரூபாய் 50 காசுகள் வசூலித்து வந்த நிலையில் தற்போது 1 ரூபாய் 55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 முதல் 200 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு யூனிட் ஒன்றிற்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு 2 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் வரை யூனிட்டிற்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ருபாய் 65 காசுகள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட்டிற்கு மேல் சென்றால் யூனிட் ஒன்றிற்கு 6 ரூபாய் 5 காசுகள் செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also read... திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதில் தாமதம் - ஆம்புலன்சிலேயே மூவர் உயிரிழப்பு

  இதுதவிர வர்த்தக பயன்பாட்டிற்கான மின்சார கட்டணத்தையும் 10 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100 யூனிட்டிற்குள் 5 ரூபாய் 70 காசுகள் என்றும், அதற்கு மேல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் 6 ரூபாய் 75 காசுகள் என்றும் 250 யூனிட்டிற்குள் மேலான வரத்த்தக பயன்பாட்டிற்கு 7 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: