புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ 2 கோடியை பறிமுதல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 • Share this:
  புதுச்சேரி இந்திராகாந்தி சிலையிலிருந்து தந்தை பெரியார் நகர் நோக்கி, ஏடிஎம்களுக்கு பணத்தை நிரப்பும் வாகனம் சென்றது. அப்போது பறக்கும்படையினர் சோதித்தப்போது கட்டுக்கட்டாக 2 கோடி ரூபாய் பணம் அதில் இருந்தது. விசாரணையில் அந்த பணம் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது . எனினும் ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தொடர் சோதனைகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திராகாந்தி சிலையிலிருந்து தந்தை பெரியார் நகர் பகுதியில் அங்குள்ள பள்ளி அருகே சென்ற தனியார் வாகனத்தை பறக்கும்படையினர் பிடித்தனர். அதில் ரொக்க கட்டுக்கள் இருந்தது, வங்கிகளில் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பவும், பணத்தை கொண்டு செல்லவும் பயன்படும் வாகனமாக இருந்தாலும் தனியார் பாதுகாப்பு நிறுவன பெயரோ, ஏதும் அவ்வாகனத்தில் இல்லை.

  இதையடுத்து அதில் பயணித்த 3 பேரையும் பறக்கும் படை அதிகாரி பாபு விசாரித்தார். இதையடுத்து அப்பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூருக்கு தகவல் தந்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். வாகனத்தில் திறந்து பார்த்தபோது ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ரூபாய் கட்டுகள் பெட்டியில் இருந்தது. தனியார் வங்கியில் இருந்து எடுத்து கொண்டு வங்கிக்கு சொந்தமான கட்டத்தில் வைக்க செல்வதாக அவ்வாகனத்தில் இருந்தோர் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்களும் இல்லை. மொத்தமாக ரூ. 2 கோடி வரை அவ்வாகனத்தில் இருந்தது. அதையடுத்து ரூ. 2 கோடியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

  மேலும் படிக்கா.... Exclusive : கொரோனா பரவல் குறித்து உண்மையை கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிப்பட்டில் நடந்த வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் சென்ற கொசப்பாளையத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் ஸ்ரீதரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: