Home /News /national /

புதுச்சேரியில் பிப்ரவரி 1 முதல் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

புதுச்சேரியில் பிப்ரவரி 1 முதல் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

EB workers strike : மின்துறை தனியார்மயத்தை கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி  முதல் வேலை நிறுத்தம் நடத்த போவதாக புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும்  ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி  அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து  மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

கடந்த காங்கிரஸ்ஆட்சியில், மின்துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்களுடன் மின்துறை செயலர் மூலம் சாதக, பாதக கருத்துக்களை கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் மின் ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை மின்துறையில்  தனியார் மயம் மற்றும் பணிபாதுகாப்புதொடர்பாக கருத்துக் கேட்பு விளக்கக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மின்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மின்துறைபொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக கூறுகையில், "மின்துறை அரசு துறையாகவே தொடர வேண்டும் என்று கோரினோம். அவர்கள் விளக்கம் தந்தனர். அந்த விளக்கத்தில், மின்துறை ஊழியர்களை அரசு ஊழியராக தொடர எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. அரசு ஊழியராகதான் பணிக்கு வந்தோம். அரசு ஊழியராகவே பணி ஓய்வு பெறுவோம். அதனால் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு செல்ல இறுதி முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Read More : சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை - கே.பி.அன்பழகன்

புதுச்சேரியில் தனியார் மயத்தை எதிர்க்கும் ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் சட்டம் 6 மாதத்திற்கு அமலாகியுள்ளது. இதற்கான ஒப்புதலை துணைநிலை ஆளுநர் கடந்த 7ஆம் தேதி   அளித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி, தொழில்துறை  சட்டம், 1941-இன் கீழ் மின்துறைச் சேவைகளை “பொதுப் பயன்பாட்டுச் சேவையாக“ 19.1.2022 முதல் 18.7.2022 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தனியார் மயத்தை எதிர்க்கும் ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் சட்டம் 6 மாதத்திற்கு அமலாகிறது என ஆளுநர் உத்தரவில் அறிவிக்கப்பட்டது.

Must Read : ‘ஒரு மாவட்டம் ஒரு விமான நிலையம் திட்டம்’ - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..

இதற்கு முன்னதாக மின் துறை கருத்து கேட்பு கூட்டம் இரு நாட்கள் நடந்தது. இதனை   ஊழியர் சங்கங்கள் புறக்கணித்தன.
மின்துறை தனியார் மயமாக்குவதற்கான கருத்து கேட்பு கூட்டம் மின்துறை செயலர் தலைமையில்  அறிவிக்கப்பட்டது. மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசின் முடிவு குறித்த இக்கூட்டத்தை ஊழியர்கள் சங்கங்கள்  புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Electricity, Puducherry, Strike

அடுத்த செய்தி