Home /News /national /

வழியனுப்ப சென்ற சமயத்தில், அமித் ஷாவிடம் ரங்கசாமி வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்..

வழியனுப்ப சென்ற சமயத்தில், அமித் ஷாவிடம் ரங்கசாமி வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்..

அமித் ஷாவிடம் ரங்கசாமி வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்..

அமித் ஷாவிடம் ரங்கசாமி வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்..

Amit Shah: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உட்பட 7 அம்ச கோரிக்கைகளை கொண்ட மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி விமான நிலையத்தில் அளித்தார்.

புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி,  அமித்ஷாவிடம் 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து நிறைவேற்ற வலியுறுத்தினார். அம்மனு குறித்த விவரம் வருமாறு,

புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள  பிரச்சினையாகும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட எந்த அதிகாரத்தையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை.

மத்திய அரசின் நிதி உதவி கூடுதலாக தேவை

நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் ரூ. 2000 கோடிகள் தேவை. நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படாவிட்டால், கடந்தாண்டை விட ரூ. 150 கோடி வரை குறைவாகதான் மத்திய அரசு நிதி உதவி கிடைத்தாக இருக்கும். அதனால் கூடுதல் நிதி உதவி தேவை.மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் இதர யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக புதுச்சேரி நடத்தப்படுவதுடன், 100 சதவீத நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் தரவேண்டும்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்

தற்போது விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 395 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படவேண்டும். இதற்கு ரூ. 425 கோடி நிதி தேவை.

புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டப்படவேண்டும்

புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு தோராயமாக ரூ. 300 கோடி மானியம் தேவை.

சுகாதார உட்கட்டமைப்புக்கு சிறப்பு உதவியாக ரூ. 500 கோடி தேவை. அதேபோல் கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி நிதி உதவி தேவை.

துரதிஷ்டவசமாக கடந்த அரசானது, கூட்டுறவுத்துறையின் பல நிறுவனங்களின் செயல்பாடுகளை முற்றிலுமாக புறக்கணித்ததால் அவை மோசமான நிலையிலுள்ளன." என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Amith shah, Puducherry

அடுத்த செய்தி