குடிபோதையில் கோஷ்டி மோதல்.. ஒருவர் அடித்து கொலை

குடிபோதையில் கோஷ்டி மோதல்.. ஒருவர் அடித்து கொலை!

ஏனாம் பிராந்தியத்தில் குடிக்கும் போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

  • Share this:
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று படுகையில் உள்ளது. ஒரு கரை பகுதி புதுச்சேரியிலும் மறு கரை ஆந்திர மாநில ஐபோலவரம் மாவட்டத்திலும் இருக்கிறது. இதனால் ஆந்திர குடி பிரியர்கள் ஏனாமிற்கு வந்து குடிப்பது வழக்கம்.

அவ்வாறு ஏனாம் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைக்கு வந்து மது குடித்த இரு கோஷ்டிகளுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் ஆந்திர மாநில பெடமாடி கிராமத்தை சேர்ந்த ராஜபாபு (25), காசி சீனிவாசராவ் (24)ஆகியோர் மீது ராஜமுந்திரையை சேர்ந்த ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

Also read: கேரளாவில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு... நாள்ஒன்றுக்கு 22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ராஜபாபு பலியானார். பலத்த காயமடைந்த காசி சீனிவாசராவ் காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு ஏனாம் காவல் ஆய்வாளர் அறிவுசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிகண்டா, கியோபிலரி ஆகிய இளைஞர்களை  பிடித்து கட்டி போட்டு இழுத்து சென்றனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏனாம் - ஆந்திர எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: