புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா, ஆன்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் லுயிஸ் பிரகாசம் வீதியில் வசிக்கும் பாபுலால் என்பவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஆன்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருட்கள் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதாக பெரியகடை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் பெரியகடை ஆய்வாளர் கண்ணன் மற்றும் சிறப்பு படையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்கள் அடங்கிய 58 பார்சலில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் பாபுலால், போதை பொருட்களை விற்பனைக்காக பெங்களூரில் இருந்து கடத்தி வந்த சுரேஷ் பிஸ்னாய், வாங்க வந்த சுமான் ஆகியோரை பிடித்து நடத்திய விசாரணையில் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததாகவும், விலைக்கு வாங்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து குற்றவாளிகளான வீட்டின் உரிமையாளர் பாபுலால், சுரேஷ் பிஸ்நாய், சுமான் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களையும், 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், இரண்டு கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சமாகும்.
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருளை ஒழிக்க காவல் துறை துரிதமாக செயல்படுகிறது. இருப்பினும் ஏதோ ஒரு வகையில் அவை வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளையும் நோக்கியுள்ளது.
சுற்றுலா பகுதியான புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கிறகு பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் புதுச்சேரிக்கு கடத்தப்படுகிறது.
இதுவரை கஞ்சா மட்டுமே புதுச்சேரியில் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது குட்கா போன்ற போதைப் பொருட்களும் புதுச்சேரிக்குள் வர துவங்கி உள்ளது. சின்ன யூனியன் பிரதேசமான புதுச்சேரி தற்போது சுற்றுலாவின் மூலம் தான் வளர்ச்சி பெற முடியும். இதனை அரசு கருத்தில் கொண்டு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் புதுச்சேரி போதைப்பொருட்களின் கூடாரமாக மாறும் அவல நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Gutkha seized, Puducherry