Home /News /national /

Puducherry Beach Festival 2022 | புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் கடற்கரை திருவிழா.. இவ்ளோ ஸ்பெஷலா??

Puducherry Beach Festival 2022 | புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் கடற்கரை திருவிழா.. இவ்ளோ ஸ்பெஷலா??

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Puducherry Beach Festival 2022 | புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலை, பாரடைஸ் கடற்கரை, பாண்டி மெரீனா, சின்னவீராம்பட்டினம் கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை  ஆகிய இடங்களில் கடற்கரை திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.

மேலும் படிக்கவும் ...
    புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் முதன் முதலாக  'I SEE PONDY  2022' - என்ற கடற்கரை திருவிழாவை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.  புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் முதன் முதலாக  I SEE PONDY  2022 -என்ற கடற்கரை திருவிழா  நேற்று துவங்கியது.

    புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் படகு போட்டி , இசை நிகழ்ச்சி , கலை நிகழ்ச்சி , கடல் உணவு சமையல் என பல நிகழ்ச்சிகள் 17 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரையில் காத்தாடி விடும் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்களும் சிறுவர்களும் ஆர்வத்துடன் வந்து காத்தாடி விட்டனர். காத்தாடி பழகாதவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காத்தாடி விட பயிற்சியும் அளித்தனர்.

    இதனால் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் காத்தாடி விடும் வீரர்களானார்கள்.வேடிக்கை பார்க்க வந்த தங்களையே வீராங்கனையராக இந்த காத்தாடிகள் மாற்றி விட்டதாக புதுச்சேரியில் தங்கி படிக்கும் மதுரை மாணவிகள் தெரிவிக்கின்றனர்.



    புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலை, பாரடைஸ் கடற்கரை, பாண்டி மெரீனா, சின்னவீராம்பட்டினம் கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை  ஆகிய இடங்களில் கடற்கரை திருவிழா 4 நாட்கள் நடக்கிறது. கடற்கரை திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை  தொடங்கி வைத்தார்.



    முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவையொட்டி 4 நாட்கள் கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.



    மணல்சிற்பம் உருவாக்குதல், நீர் விளையாட்டு, கடல் உணவு திடல், கைப்பந்து போட்டி,கடல்சிற்பி ஆபரண கண்காட்சி, திரை இசைக்குழு இன்னிசை நிகழ்ச்சி போன்றவை அடுத்து வரும் நாட்களில் நடத்தப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Puducherry, Tamilisai Soundararajan

    அடுத்த செய்தி