• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜிப்மரில் மருத்துவர்கள் பாதுகாப்பு உடையணிந்து பதாகைகளுடன் அமைதி போராட்டம்..

ஜிப்மரில் மருத்துவர்கள் பாதுகாப்பு உடையணிந்து பதாகைகளுடன் அமைதி போராட்டம்..

ஜிப்மர் மருத்துவர்கள்

ஜிப்மர் மருத்துவர்கள்

பணியின் போது மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் பாதுகாப்பு உடைகளுடன் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

  • Share this:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் கடந்த 31-ஆம் தேதி பணியில் இருந்த மருத்துவர் ஆதேன் குணசேகரனுக்கும், ஆண் செவிலியர் செந்தில் என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த செந்தில் மருத்துவரை  தாக்கியதாக புகார் கூறப்படுகிறது.



இதனை கண்டித்தும் பணி பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் கடந்த 2-ஆம் தேதி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததால் மருத்துவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் நேற்று  கறுப்புபேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்திற்கு இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று  ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஜிப்மர் உள்ளிருப்பு மருத்துவர்கள் சங்கம்  போராட்டத்தை நடத்தியது.



போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர். மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க.. மனைவி இறந்த அதிர்ச்சியில் ஓய்வுபெற்ற ஊழியர் உயிரிழப்பு.. சோகத்தில் உறவினர், சுற்றத்தினர்..

தங்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் PPE Kit என்னும் முழு உடல் கவசத்தை அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: