”மருத்துவர்களை மனம் புண்படும்படி திட்டி, அச்சுறுத்துகிறார்” - கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் 2 மணிநேரம் பணி புறக்கணிப்பு..

கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளின் மனம் புண்படும் வகையில் திட்டியதாகவும் அச்சுறுத்தும் வார்த்தைகளால் மிரட்டியதாகவும் சுகாதார ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

”மருத்துவர்களை மனம் புண்படும்படி திட்டி, அச்சுறுத்துகிறார்” - கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் 2 மணிநேரம் பணி புறக்கணிப்பு..
கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்
  • Share this:
புதுச்சேரியில் கடந்த 18-ஆம் தேதி கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளின் மனம் புண்படும் வகையில் திட்டியதாகவும் அச்சுறுத்தும் வார்த்தைகளால் மிரட்டியதாகவும் சுகாதார ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆளுநர் கிரண்பேடி இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக நேற்று மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினார்கள்.

இரண்டாவது நாளாக இன்றும் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் தனது மிரட்டும் வார்த்தைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார மையங்களில் இன்று காலை 8 மணி முதல்  இரண்டு மணிநேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.


“கொரோனா நோய் காலத்தில் விடுமுறையும் பார்க்காமல் பணியாற்றும் மருத்துவர்களையும் சுகாதார ஊழியர்கனையும் மனம் புண்படும் ஆளுநர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்  வார்த்தைகளைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” எனவும் சுகாதார ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading