ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜிப்மர் ஹிந்தி விவகாரம் : போராட்டம் நடத்திய 4 திமுக எம்.எல்.ஏக்கள் கைது

ஜிப்மர் ஹிந்தி விவகாரம் : போராட்டம் நடத்திய 4 திமுக எம்.எல்.ஏக்கள் கைது

 4 திமுக எம்.எல்.ஏக்கள் கைது

4 திமுக எம்.எல்.ஏக்கள் கைது

ஜிப்மர் ஹிந்தி விவகாரம் தொடர்பாக நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.  ஜிப்மரில் அனைத்து அலுவல் பதிவுகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என  இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிவிப்பை சுட்டிக்காட்டி ஜிப்மர் இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு புதுவையில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் இன்று ஜிப்மர் நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாநில அமைப்பாளர் சிவா அறிவித்திருந்தார். இதன்படி இன்று காலை 8 மணியிலிருருந்து ஜிப்மர் பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பு புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளில் இருந்து திமுகவினர் ஒன்றுகூடினர். மாநில அமைப்பாளர் சிவா தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9.30 மணியளவில் ஜிப்மர் பிரதான வாயிலை நோக்கி திமுகவினர் முன்னேறி சென்றனர்.

அவர்களை போலீசார் தடுப்புகட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவில் ஒரு பிரிவினர் தடுப்பு கட்டைகளை தள்ளிவிட்டனர். இதனால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அவர்களையும் போலீசார் முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கு திமுகவினர், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ உட்பட 4 எம்எல்ஏக்கள் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோரிமேடு காவல்நிலையத்துக்கு அழைத்துசென்றனர்.

ALSO READ | ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இதேபோல ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து மதிமுக சார்பில் ஜிப்மர் நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக மாநில  பொறுப்பாளர் கபிரியேல் தலைமை வகித்தார். மதிமுக துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி கண்டன உரையாற்றினார். போராட்டத்தில்  நிர்வாகிகள் வேதாவேணுகோபால், மாசிலாமணி, ராஜேஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்தியை திணிப்பதாக அமைந்துள்ளன. இது அதிர்ச்சி அளிக்கின்றது. சி பிரிவு மண்டலத்தில் உள்ள மாநிலங்களில் ஆங்கிலம் தொடர்பு  மொழியாக  இருக்கும் என்று ஆட்சி மொழி சட்டம் கூறுகிறது. இப்பட்டியலில் புதுச்சேரி சி பிரிவில் வருவதால் ஆங்கிலத்தை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ |  பெருமாள் கோயில் நிலத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடக்கூடாது - எச்.ராஜா எச்சரிக்கை

ஆனால் இப்போது இந்தியில் மட்டும்தான் அனைத்து பதிவேடுகளும் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். உயர்தனி செம்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழினம் என்றைக்கும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளப்  போவதில்லை. இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.

எனவே ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய  அரசு நிறுவனங்களில் அனைத்து பதிவேடுகளும்  இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும் பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: DMK, Hindi, PM Modi