கலைஞர் உணவுத் திட்டம் குறித்த விவகாரம்: சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்.. அதிமுக - திமுக வெளிநடப்பு

காலை சிற்றுண்டி திட்டம் ராஜீவ் பெயரில் உள்ளதா? கருணாநிதி பெயரில் உள்ளதா? என்ற சர்ச்சை சட்டப்பேரவையில் எழுந்தது. அதற்கு முதல்வர் நாராயணசாமி இது அரசியல் செய்யும் இடமில்லை என்றார்.

கலைஞர் உணவுத் திட்டம் குறித்த விவகாரம்: சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்.. அதிமுக - திமுக வெளிநடப்பு
காலை சிற்றுண்டி திட்டம் ராஜீவ் பெயரில் உள்ளதா? கருணாநிதி பெயரில் உள்ளதா? என்ற சர்ச்சை சட்டப்பேரவையில் எழுந்தது. அதற்கு முதல்வர் நாராயணசாமி இது அரசியல் செய்யும் இடமில்லை என்றார்.
  • Share this:
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று தொடங்கியது. முதலில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்ட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், பாரதிதாசன் மகன் மன்னர் மைந்தன், முன்னாள் ஆளுநர் ஜா,கொரோனாவில் இறந்த தமிழக எம்எல்ஏ அன்பழகன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்து  சிறப்பு குறிப்பில், அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் எழுந்து பேசினார் அப்போது, "பட்ஜெட்டில் 13-வது பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். 45-வது பக்கத்தில் காலை பால் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட டாக்டர் கருணாநிதி  காலை சிற்றுண்டி திட்டமாக விரிவுப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் முதலில்  உள்ளது உண்மையா- பின்னர் உள்ளது உண்மையா? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு புதுச்சேரியில் சிலை வைக்க கோரினோம். செய்யவில்லை. அதற்கு பிறகு கருணாநிதி மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகு சிலை அமைக்க கமிட்டியும், பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துள்ளீர்கள். சாலைக்கு பெயர் அறிவிப்பு வெளியிட்டீர்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு இல்லை. இது அரசியல் ரீதியில் அநாகரிகம். முதல்வர் பொதுவானவராக செயல்பட வேண்டும்.

கடந்த 2002-இல் காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ்காந்தி பெயரில் சோனியாக காந்தி புதுச்சேரியில் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்தார். ராஜீவ் பெயரில் தொடங்கிய இத்திட்டத்தை மாற்றி உள்ளீர்கள். ஸ்டாலினும் உண்மை தெரியாமல் பாராட்டுகிறார். காலை உணவு திட்டம் ராஜீவ் பெயரில் உள்ளதா- கருணாநிதி பெயரில் உள்ளதா?” என ஆவேசமாக கேட்டார்.இதற்கு முதல்வர் நாராயணசாமி, இது அரசியல் செய்யும் இடமில்லை. அரசியல் பேச வேண்டாம் என்றார்.


இதற்கு அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது திமுக உறுப்பினர் சிவா குறுக்கிட்டு, கலைஞர்  கருணாநிதிக்கு சிலை வைக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. சிலை வைப்பதாக அரசுதான் அறிவித்தது.

ஆனால் சிலை கமிட்டி இதுவரை ஒரு முறைக்கூட கூட்டப்படவில்லை. அதேபோல் சாலைக்கு பெயர் அறிவித்து நடைமுறையாகவில்லை. இப்போதும் காலை உணவு திட்டத்துக்கும் பெயர் வைக்க நாங்கள் கேட்கவில்லை. அமைச்சர்கள் தூண்டிவிட்டுதான் அதிமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என ஆவேசமாக கூறினார்.

மேலும் படிக்க...பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகளுக்கு எளிமையான முறையில் சந்தன சாத்துப்படி..

இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா, வெங்கடேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி இருக்கும் திமுக முதல்முறையாக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading