புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு...!

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு...!
புதுச்சேரி
  • Share this:
புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் இதுவரை 4 பேருக்கு  நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 13 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.   அவசர அழைப்பு எண் 104-க்கு  இதுவரை 1898 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற காரணங்களுக்காக சாலையில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 526 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 46 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 484 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா நோய் கண்டறியப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், திருக்கனூர், திருபுவனை, காட்டேரிக்குப்பம்,முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வர முடியாதபடி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 14-ம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதால் மக்கள் பயன்படுத்தி கொண்டு நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வராமல் மருத்துவ உதவிக்கு 104, ஊரடங்கு புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1070 மற்றும் 1077, மளிகை மற்றும் காய்கறிகள் வீடுதேடி வழங்குவதற்கு 22 53345 மற்றும்  2251691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading