50,000 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசி-பணம் - புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் 50,000 பேருக்கு நேரடியாக பணம் மற்றும் அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். 

50,000 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசி-பணம் - புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு
கமலக் கண்ணன்
  • Share this:
புதுச்சேரி கல்வி  அமைச்சர் கமலகண்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘புதுச்சேரியில் ஆண்டுதோறும் சென்டாக்(Centac) எனப்படும் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை குழு மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2020-21ம் கல்வியாண்டில் நீட் அல்லாத தொழில்முறை மற்றும் இளங்கலை, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் வரும் திங்கள்கிழமை முதல் ஆன்லைன் முறையில் தொடங்கப்படுகிறது.

கல்லூரி திறப்பதற்கு முன்பே அனைத்துவிதமான பாடப்பிரிவுக்கும் மாணவர் சேர்க்கையினை இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். கல்லூரி திறப்பு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார். சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பார்.

காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, கலை, அறிவியல் பாடங்களுக்கு அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கல்லூரிகளே சென்டாக் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளும். அப்பகுதி மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் படிக்க விரும்பும் பிற பிராந்திய மாணவர்கள் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அமைச்சர், 2016-17ம் ஆண்டில் கலை, அறிவியல் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றில் 3,858 இடங்கள் இருந்தன.


கடந்த ஆண்டு இந்த இடங்களின் எண்ணிக்கையை 6,620 ஆக உயர்த்தியுள்ளோம். 72 சதவீத இடங்கள் இருக்கும் வசதிகளை கொண்டே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிளஸ்2 தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான தொழில்முறை, கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் இணைக்கப்படும். இதுவரை மத்திய பல்கலைக்கழகத்தையே பல விஷயங்களுக்கு சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இனிமேல் பாடத்திட்டம், புதிய பிரிவுகள் தொடக்கம், தேர்வுகள், மதிப்பீடு, மாணவர் சேர்க்கை போன்றவற்றை தொழில்நுட்ப பல்கலைக்கழகமே முடிவு செய்யும். வரும்காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். விரைவில் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரடங்கால் கடந்த 4 மாதமாக புதுச்சேரியில் பள்ளிகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக 4 மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 4 கிலோ அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மளிகைக்கு பதிலாக 250 ரூபாயும், 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 330 ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.தமிழ்நாடு பாடத்திட்டத்தை நாம் பின்பற்றுவதால் புதுவை, காரைக்காலில் உள்ள எம்எஸ்ஓ, கேபிள்டிவிக்கள் தமிழகத்தில் ஒளிபரப்பும் கல்வி நிகழ்ச்சிகளை தங்கள் தொலைக்காட்சிகளின் வாயிலாக ஒளிபரப்பி மாணவர்கள் பயனடைய வழி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வாயிலாக கேபிள் டிவி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்ககம் சார்பாக காணொலி படக்காட்சிகளை தயாரித்து கேபிள்டிவி மூலம் ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading