Home /News /national /

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகிற்கே வழிகாட்டுகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகிற்கே வழிகாட்டுகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்

tamilisai

tamilisai

டிஜிட்டல் இந்தியா இன்று உலகிற்கே வழிகாட்டி வருகிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு-புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி தனியார் ஓட்டலில்  'தகவல் தொழில்நுட்ப மாநாடு 2022 நடந்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். ட்ரீம் தமிழ்நாடு அமைப்பின் அமைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  சுரேஷ் சம்பந்தன் விழாவில் கலந்து கொண்டார். மாநாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும்போது, இன்றைய நவீனமயமாதலின் தேவையை உணர்ந்து பிரதமர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல துறைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கல்வித்துறையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மாதா, பிதா, குரு, கூகிள், தெய்வம் என்று சொல்லும் அளவிற்கு உருவாகி இருக்கிறது.

தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் - திருமாவளவன்


பாரதப் பிரதமர் 'பீம்' என்ற பண பரிவர்த்தனை செயலியை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது,  நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்போது அது பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரில் இருக்கவேண்டும் என்று விளக்கமளித்தார். தொழில்நுட்ப வளர்ச்சி இன்று கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.
உக்ரைனில் போர் காரணமாக மாணவர்கள் இந்தியா வந்து விட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் இணையவழியில் தொடங்கிவிட்டது. இதுவே தொழில்நுட்பத்தின் சாதனையும் பயன்பாடும்.

தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு என்னோட தாழ்மையான வேண்டுகோள். தொழில்நுட்ப வளர்ச்சி நேர்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதற்கான முயற்சியும் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியை நம் கவனம் செலுத்துகின்ற அதேவேளையில் இயற்கை, பண்பாடு ஆகியவற்றை  பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். அதனால் இன்னும் அதிகமாக பணியாற்ற முடியும் என்பார் பாரதப் பிரதமர். டிஜிட்டல் இந்தியா இன்று உலகிற்கே வழிகாட்டி வருகிறது. செயற்கை அறிவுத்திறம் (Artificial Intelligence) எல்லா விதத்திலும்மிகவும் உதவியாக இருந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம்.

தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.இருப்பவர்கள் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: BJP, Digital Currency, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி