• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேரில் ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர்

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேரில் ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர்

தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது, டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் ஆலோசனை நடத்தினர்.

  • Share this:
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் இன்று ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டார், டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் கொரோனா நோய் குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதில் புதுவையில் 48, காரைக்காலில் 15, மாகேவில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 85, காரைக்காலில் 12, ஏனாமில் 4, மாகேவில் 9 பேர் என 110 பேர்  தொற்றுடன்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

புதுச்சேரியில் 2ஆவது  தவணை உட்பட 10 லட்சத்து 32 ஆயிரத்து 254 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் 3 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்து கொள்வதால் நோய் தொற்று குறைந்து வருவதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் இன்று ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றார். குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்ட அவர், டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், மழைக்காலங்களில் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் கூடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலுக்கு நடைபெற்று வரும் சிகிச்சை, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினேன்.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உயிரிழப்புகள் இல்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் நலமடைந்து வருகிறார்கள். டெங்கு சிகிச்சைக்கு குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும்.

கொசு உற்பத்தியை தடுக்க பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும்  உள்ளாட்சித்துறை அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அதனையும் கண்காணித்து வருகிறேன். டெங்கு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்துவருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்கிறது என்றார்.

இன்று காலை முதலமைச்சர் ரங்கசாமி தன்னை சந்தித்த போது, டெங்கு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறிய தமிழிசை, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும் என  தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். 100 சதவீத இலக்கை அடைய இன்னும் மூன்று லட்சம் தடுப்பூசி மட்டுமே போடவேண்டி இருக்கிறது என்றும் கேட்டுக்கொண்டார்.

Must Read : வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு!

மேலும், பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனைகளையும் அதற்கான முன்னேற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது என்றும், அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: