• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Puducherry | புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரம் - தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு

Puducherry | புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரம் - தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

டீ கடைகளில் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா நோய் பரவ அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வருகிற 10-ம் தேதி வரை டீ கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து தனியார் தொழிற்சாலை புதுச்சேரி அரசுக்கு 10 லட்சம் சானிட்டைசர் மற்றும் முக கவசங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி மக்கள் முற்றிலுமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் மனக்கவலையுடன் தான் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக கூறிய அவர், கொரோனா மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்க உள்ளோம் என்றும், மருத்துவ இறுதியாண்டு படித்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

பின்னர் ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவ களப்பணி செய்ய பேசியுள்ளதாக தெரிவித்தார். மேலும் டீ கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் டீ கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் போட்டி - அச்சமின்றி போராடிய டிராபிக் ராமசாமி



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: