புதுச்சேரியில் இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கொரோனோ நோய் தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை என 55 மணி நேரம் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. நேற்று 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஊரடங்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருந்தனர்.
இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதேபோல மதுபான கடைகள் திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் மற்றும் மால்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பார்சல் மட்டும் எடுத்துச் செல்வதற்கு இரண்டாவது நாளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு நாளை காலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும் திங்கட்கிழமை முதல் பகல் 2 மணி வரை மட்டுமே மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு பிறகு மக்கள் வெளியே வரக்கூடாது. உணவகங்கள், பாலகங்கள், மருந்தகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளும் மதியம் 2 மணியுடன் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று காரணமாக செவ்வாய்க் கிழமைதோறும் நடைபெறும் மதகடிப்பட்டு வார சந்தையை காலவரையின்றி மூடுவதற்கு கொம்யூன் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி-கோரிமேடு எல்லையில் விழுப்புர மாவட்டத்திற்கு உட்பட்ட ஆரோவில் போலீசார் வாகன சோதனையில் பட்டுள்ளனர்.
Must Read : தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு : என்னென்ன இயங்கும், இயங்காது?
தமிழகத்தில் ஊரடங்கு என்பதால் தமிழக பகுதிக்குள் மக்களை செல்ல அனுமதிக்கவில்லை. காவல் துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவே புதுச்சேரியின் ஒருநாள் உச்ச கட்ட இறப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, CoronaVirus, Lockdown, Puducherry