முகப்பு /செய்தி /இந்தியா / புதுச்சேரியில் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை திறக்கக் கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை திறக்கக் கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை திறக்கக் கோரி சமூக இடைவெளியுடன் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை திறக்கக் கோரி சமூக இடைவெளியுடன் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை திறக்கக் கோரி சமூக இடைவெளியுடன் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் கிராமத்தில் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளது. கொரோனா காரணமாக புதுச்சேரி முழுவதும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக அவை திறக்கப்பட்டாலும், இந்த தனியார் மதுபான தொழிற்சாலையைத் திறக்க கலால் துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை.

போலி முத்திரை மூலம் மதுபானம் உற்பத்தி செய்ததாக இந்த தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு எழுந்ததே அதற்குக் காரணமாகும். அதற்குரிய அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருந்தும் தொழிற்சாலையை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

Also read: நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலையின் நிலை இதுதான் - ப.சிதம்பரம், எம்.பி.,

இதனால் தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையை உடனடியாக திறந்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வாழ்வளிக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள், தொழிலாளர்கள் என

200க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்,

top videos

    தவறு செய்த மதுபான தொழிற்சாலையைக் கண்காணிக்கும் அரசு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தொழிற்சாலை உரிமையாளரைப் பழிவாங்குவதாக நினைத்து 400 தொழிலாளர்களின் வாழ்வை அரசு நாசம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    First published:

    Tags: Labor Protest, Puducherry