புதுச்சேரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் சடலங்கள் குவிப்பு - அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்

Youtube Video

தொடரும் உயிரிழப்புகள் காரணமாக, பிணவறையில் உடலை வைக்கக் கூட இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. கொரோனா சிகிச்சை வார்டிலேயே, உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள், சிகிச்சை அளிக்கும் வார்டிலேயே கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

  தொடரும் உயிரிழப்புகள் காரணமாக, பிணவறையில் உடலை வைக்கக் கூட இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. கொரோனா சிகிச்சை வார்டிலேயே, உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

  நோயாளிகளை சந்திக்கச் சென்ற சுயேச்சை எம்எல்ஏ நேரு, இதுதொடர்பான வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். படுக்கை வசதி இல்லாததால், மருத்துவமனையில் அமர்ந்தபடியே பெண் ஒருவர் ஆக்சிஜனை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: