Home /News /national /

மும்பை அருகே உரசிக்கொண்ட ரயில்கள்... பெட்டிகள் தடம்புரண்டு விபத்து...

மும்பை அருகே உரசிக்கொண்ட ரயில்கள்... பெட்டிகள் தடம்புரண்டு விபத்து...

2 ரயில்கள் உரசிக் கொண்டதால் பெட்டிகள் தடம்புரண்ட காட்சி.

2 ரயில்கள் உரசிக் கொண்டதால் பெட்டிகள் தடம்புரண்ட காட்சி.

மதுங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது எதிரோ வந்து கொண்டிருந்த கடாக் விரைவு ரயிலின் சில பெட்டிகளோடு, புதுவை ரயிலின் பெட்டிகள் உரசியதால் பெட்டிகள் தடம்புரண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை அருகே 2 விரைவு ரயில்கள் உரசிக் கொண்டதால் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இரவு நடந்த இந்த சம்பவத்தின்போது, பயணிகள் அலறியதால் பரபரப்பு காணப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் தாதருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நேற்றிரவு இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது மும்பை அருகேயுள்ள மதுங்கா ரயில் நிலையம் அருகே விபத்தை எதிர்கொண்டது.

தாதரில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இரவு 9.45 மணிக்கு பெட்டிகள் தடம்புரண்டன. இரவில் நேர்ந்த விபத்தால் பயணிகள் என்ன ஆனது என்று தெரியாமல் அலறல் சத்தம் எழுப்பினார்கள்.

இதையும் படிங்க - நான்காம் அலையை நோக்கி நகர்கிறதா இந்தியா? - நிபுணர்கள் கூறுவது என்ன?

அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது எதிரோ வந்து கொண்டிருந்த கடாக் விரைவு ரயிலின் சில பெட்டிகளோடு, புதுவை ரயிலின் பெட்டிகள் உரசியதால் பெட்டிகள் தடம்புரண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே போலீசார், நடந்த சம்பவம் சிறு விபத்துதான் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த 3ம் தேதி மகாராஷ்டிராவின் நாசிக் அருகே லோக மான்ய திலக் - ஜெய் நகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க - நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன் - பீதியடைந்த விமான பயணிகள்!

இதற்கிடையே, இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டதன் 169 வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. 1853-ல் ஏப்ரல் 16-ம்தேதி மும்பை - தானே இடையே முதன்முறையாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
Published by:Musthak
First published:

Tags: Train Accident

அடுத்த செய்தி