வாட்ஸ்ஆப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருமணம்

புதுச்சேரியில் வாட்ஸ்ஆப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சீர்வரிசை அளித்து திருமணம் நடத்தப்பட்டது.

வாட்ஸ்ஆப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருமணம்
திருமணம் நடைபெற்ற போது
  • Share this:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டை பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமி. தாய் தந்தையை இழந்தவரான இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் என்பவருக்கும்  திப்ராயப்பேட்டை கருமாரியம்மன் கோவிலில்  திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி, திருமணத்திற்கான பொருட்கள் வாங்க முடியாமல், மாற்றுத்திறனாளி லட்சுமி சிரமப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணத்திற்கான உதவி பெற நேரில் சென்று பெற முடியாது என்பதால், வாட்ஸ் ஆப் மூலம் திருமண மொய் என்ற குழுவை உருவாக்கி அதில், மாற்றுத்திறனாளி லட்சுமியின் நிலை குறித்து தகவல் பதிவிட்டு, குழுவில் உள்ள நபர்கள், திருமணத்திற்கான பொருட்கள் வாங்க தலா 200 ரூபாய் என லட்சுமியின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.


மாற்று திறனாளிகளுக்கு உதவும்"சக்ஷம்" அமைப்பு ஒன்று அப்பெண்ணுக்கு உதவ முன்வந்து திருமணத்திற்கு தேவையான புடவை, சீர்வரிசை சாமான்களும்,நேரு வீதியில் உள்ள தங்க நகை கடை ஒன்று, மாங்கல்யத்திற்கு பணம் ஏதும் வாங்காமலும் லட்சுமியின் திருமண மொய்யாக வழங்கியுள்ளது.

மேலும், லட்சுமியின் வங்கி கணக்கில் ரூ. 4000க்கும் அதிகமான பணம் சேர்ந்தும் வாட்ஸ்ஆப் குழு மூலம் சேர்ந்த புடவை, மாங்கல்யம், சாப்பாட்டுக்கான பணம், சீர்வரிசை சமான்கள்  மாற்றத்திறனாளி பெண் லட்சுமியிடம் வழங்கி  லட்சுமிக்கு திருமணம் நடந்தது.

Also read... செல்போனில் இருந்து சீன செயலிகளை தூக்கும் இந்திய செயலி - அதிரடி காட்டிய பிளே ஸ்டோர்


Also see...
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading