நடத்தையில் சந்தேகம்; மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்; மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்
சாந்தி.
  • Share this:
புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமகள் நகர் 4வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் விஜயன் (55). சுல்தான்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (52) தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.  இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே மனைவியின் நடத்தையில் விஜயனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இது சம்மந்தமாக அடிக்கடி இவர்களுக்குள் தகராறு நடந்துவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை கணவன், மனைவி இடையே தகராறு முற்றி, ஆத்திரத்தில் விஜயன் தூங்கிக்கொண்டிருந்த  மனைவியைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Also read: நெல்லையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி


இதனையடுத்து விஜயன் அங்கிருந்து முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். விஜயனை போலீசார் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தியின் உறவினர் பரணீகுமாரின் புகாரை பெற்ற போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்னர்.
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading