தீவன உயர்வு: மாடுகளை கறிக்கு விற்கும் அவலம்! புதுச்சேரி சந்தையில் குறைந்த மாடுகள்

தீவன உயர்வு: மாடுகளை கறிக்கு விற்கும் அவலம்! புதுச்சேரி சந்தையில் குறைந்த மாடுகள்
  • Share this:
தீவனங்களின் விலை உயர்வால் புதுச்சேரியிலுள்ள மாட்டுச் சந்தையில் இந்தாண்டு மாடுகளின் வரத்து குறைவாக இருந்தது. 

புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு சந்தை மதகடிப்பட்டு கிராமத்தில் இயங்கி வருகிறது. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்து இயங்கி வரும் 2 ஏக்கர் நிலப்பரப்புடைய இந்த சந்தையில் மாடு விற்பனையே பிரதானமாக நடைபெற்றுவருகிறது.

கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் இங்கு காலை முதல் மாலை வரை விற்கப்படும். பொங்கலையொட்டி இங்கு நடைபெறும் இந்த சந்தையை "போகிச் சந்தை" என்று மக்கள் அழைத்துவருகின்றனர். இவ்வாண்டு நடைபெறும் இந்த சந்தையில் மாடுகளின் வரத்து பெரும் அளவில் குறைந்து விட்டது. காரணம் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மாடுகளை வளர்க்க முடியாமல் கறிக்கு விற்கும் அவலத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.


மாடுகளின் வரத்து குறைந்ததால்  காய்கறி,பழ வகைகள், கருவாடு, கோழி,மாட்டு வண்டிக்கு தேவையான பொருட்கள் சந்தையாகவே மாறி போனது இந்த மாட்டு சந்தை என்பது வேதனைக்குரியது.

Also see:
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading