புதுச்சேரியில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து 2,50,000 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள மதுபானகடையில், அப்பகுதியை சேர்ந்த ஜெயபால்(21) என்பவர் மது வாங்கினார். அதற்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அது கள்ளநோட்டாக இருந்ததால், கடை மேலாளர் பிரபாகரன், உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 500 ரூபாய் கள்ளநோட்டை வாங்கி கொண்டு ஜெயபாலை காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது, சாரம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் கொடுத்தார் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்த போது மேலும் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரும்பார்த்தபுரம் சேர்ந்த சரண், ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த கமல், ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளநோட்டு மாற்றிய சம்பவத்தில் ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதான கமல் பாஜக பிரமுகர் ஆக இருந்து வந்தார், அப்போது கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது ஆளுங்கட்சியான என். ஆர். காங்கிரஸ் ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.