Home /News /national /

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாநிலத்தில் இதுவரை 1,27,713 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,33,866 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் 1,107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 956 நபர்களுக்கும், காரைக்காலில் 126 பேர், ஏனாமில் 7 பேரும், மாஹேவில் 18 பேர் என மொத்தம் 1,107 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 4,270 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,883 ஆக அதிகரித்துள்ளது.

Also read... தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 17,934 பேர் பாதிப்பு

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,713 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,33,866 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Also read... கொரோனா பாதிப்பு: 5 வயது சிறுவன், 30 வயது பெண் உட்பட 19 பேர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,03,845 பேரும், இரண்டாம் தவணை 5,86,589 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 1,364 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 14,91,798 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Puducherry

அடுத்த செய்தி