ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது கொரோனா இறக்கப்பட வேண்டும் - தமிழிசை நம்பிக்கை 

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது கொரோனா இறக்கப்பட்டு இருக்குமென துணைநிலை ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் தற்போது 8 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி துணை ஆளுநர் மாளிகை முன்பு துவக்கப்பட்டது. கொசுவால் டெங்கு பரவுகிறது என்பதை குறிக்கும் வகையில் கொசு வேடமணிந்த ஒருவர் பேரணியில் பங்கேற்றார்.

இந்த பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்து பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது போல தான் தற்போதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read : 2024-ல் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம்: காங்கிரஸ் தலைவர் சூளுரை

பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். உயரிழப்பு போன்றவை இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா 3-வது அலை வராது என்று நாம் கூற முடியாது. ஒருவேளை குழந்தைகள் அதிகம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 15 தேசிய கொடி ஏற்றும் போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

Also Read :  66 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வாங்க மத்திய அரசு முடிவு

அதனைத் தொடர்ந்து கதிர்காமம், இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் பிராணவாயு வசதி கொண்ட தற்காலிக கொரோனாசிகிச்சை மையத்தை துணைநிலை ஆளுநர் திறந்து வைத்தார்.தொற்று கண்டறியப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை
மையத்தை அடைவதற்கு முன்பாக பிராணவாயு வழங்கப்படும் நிகழ்வினை செய்முறை மூலமாக மருத்துவர்கள் நிகழத்திக் காட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: