• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்! 

புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்! 

கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்! 

கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்! 

கர்ப்பிணிகளுக்கு ஊசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இன்று முதல் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார்.

  • Share this:
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என நோய் தடுப்புக்கான தேசிய குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதன்பேரில், புதுச்சேரியில் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது.

முகாமை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவிட் நோடல் அதிகாரி ரமேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் முரளி, முருகன், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில்,புதுச்சேரியில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு முதன் முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கு ஊசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இன்று முதல் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

புதுச்சேரியில் இதுவரை 5.5 லட்சம் தடுப்பூசி போட்டுள்ளோம். இதில் எந்தவித பெரிய பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. 3வது அலை வருமா? என்று தெரியாது. இருப்பினும், பாதுகாப்பு கருதி தடுப்பூசியை அதிகரிப்பதற்காக 3ம் கட்டமாக தடுப்பூசி திருவிழா 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு வேண்டிய 68 ஆயிரம் தடுப்பூசிகள் நம்மிடம் வந்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் கிடையாது.

எனவே மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் எந்தவித தயக்கமுமின்றி வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பிறகே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறோம். இதில் அனைவரும் வந்து கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Also read: ‘பெட்ரோல் போட கடன் கொடுங்க’: வங்கி மேலாளரிடம் மனு!

தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு கூறுகையில், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வந்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் உள்ளது. எனவே, கொரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து பிறகு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 5 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரிய அளவில் யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை. இந்த தடுப்பூசி போடுவதால் கொரோனா வருமா? என்ற அச்சம் வேண்டாம். தடுப்பூசி போட்டதால் யாருக்கும் கொரோனா வரவில்லை. கர்ப்பிணிகள் 9 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: