வீடு வீடாகச் சென்று கொரோனோ சோதனை நாளை முதல் 90 நாட்கள் தொடரும்!

சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள் உட்பட பத்து லட்சம் கட்டிடங்களில் 100 வீடுகளுக்கு ஒரு குழு என நியமித்து தினந்தோறும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

வீடு வீடாகச் சென்று கொரோனோ சோதனை நாளை முதல் 90 நாட்கள் தொடரும்!
சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள் உட்பட பத்து லட்சம் கட்டிடங்களில் 100 வீடுகளுக்கு ஒரு குழு என நியமித்து தினந்தோறும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
  • Share this:
ரிப்பன் பில்டிங்கில் உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் தினந்தோறும் கண்காணிக்கப்படுகிறது. கொரோனா தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுக்க நாளை முதல் ஒவ்வொரு வீடுகளில் சளி, காய்ச்சல் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள் உட்பட பத்து லட்சம் கட்டிடங்களில் 100 வீடுகளுக்கு ஒரு குழு என நியமித்து தினந்தோறும் ஆய்வு செய்யப்படவுள்ளது. 90 நாட்களுக்கு இந்த கண்காணிப்பு பணி தொடரும்.


பணியில் ஈடுபடவுள்ள குழுவினருக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதே போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் தடையின்றி உணவுகள் வழங்கப்படுகின்றன. சுமார் 6 லட்சம் பேர் தினம்தோறும் பயனடைகின்றனர். மக்களைத் தேடி சென்று காய்கறிகளை விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மைப் பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பதற்கான அனைத்து பொருட்களும் கையிருப்பு உள்ளன. முகக்கவசம் , கையுறை இல்லாமல் யாரும் பணியாற்றக்கூடாது. மீறி பணியாற்றினால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் முகக்கவசம், கிளவுஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading