• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கம்

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கப்படுவதாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • Share this:
    புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கப்படுவதாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று காரணமாக வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்லவதை தடுக்கும்நோக்கில் தமிழகத்திற்கு இணையாக கொரோனா வரி போடப்பட்டது.

    தற்போது இந்த வரி நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பழைய விலைக்கே மதுபானங்கள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 24 ஆம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் மார்ச் 23 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அதன்படி, பொது போக்குவரத்து, மதுகடைகள், மதுபார்கள், ஹோட்டல்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 2021 மே மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளிக்கத் தொடங்கியது.

    இதனால், மே மாதம் 25 ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அத்துடன், வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனால், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் விலையானது, தமிழகத்தில் விற்பனையாகும் விலைக்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொது போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

    Must Read : புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

     

    அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் மேலும் 3 மாதங்களுக்கு மது பானங்களுக்கு கொரோனா வரி நீடிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து வந்த கொரோனா வரியானது தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: