Home /News /national /

தலைமை செயலாளருக்கு கொரோனா... நேற்று பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் , ஆளுநருடன் பங்கேற்ற நிலையில் பாதிப்பு... புதுச்சேரி அப்டேட்

தலைமை செயலாளருக்கு கொரோனா... நேற்று பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் , ஆளுநருடன் பங்கேற்ற நிலையில் பாதிப்பு... புதுச்சேரி அப்டேட்

தலைமைச் செயலாளருக்கு கொரோனா

தலைமைச் செயலாளருக்கு கொரோனா

Corona : தலைமைச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அவர் ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வில்லை.

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வினி குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரியில் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 900 த்தை தொட்டது. தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,27,629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,31,866 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று காணொலி மூலம் பிரதமர் தேசிய இளைஞர்தின விழாவை துவக்கி வைத்தார். இதற்கான விழா தனியார் ஓட்டலில் நடந்தது.விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த விழாவிற்க தலைமை செயலர் அஸ்வினி குமார் வந்தார். ஆனால் அவர், மேடையில் உட்காராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வில்லை.

    Must Read :  ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை

    இந்நிலையில், அஸ்வினி குமார் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chief Secretary, Corona, Puducherry

    அடுத்த செய்தி