Home /News /national /

Puducherry Election Results 2021 : புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் 80க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா தொற்று

Puducherry Election Results 2021 : புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் 80க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 1,546 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 84 முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுச்சேரியில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 1,546 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 84 முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக புதுச்சேரி தாவரவியல் பூங்கா முகாமில் முகவர்கள் அதிக அளவில் கூடி முண்டியடித்ததார் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியத்ததால் சுகாதார ஊழியர்கள் பரிசோதனை செய்ய முடியாமல் திணறினார்கள்.

ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அவர்கள் சோதனை செய்ய முடியாது என கூற முகாமில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 1,546 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 84 முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுச்சேரியில் இது வரை 7,80,162 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 7,00,035 பேருக்கு நோய் இல்லை. 1,90,073 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கினால் தண்டனை வழங்கப்படும் என சுகாதார துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Must Read : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் மாற்றமா? புதிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

 

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார்களை 104 எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: CoronaVirus, Puducherry, Puducherry Assembly Election 2021

அடுத்த செய்தி