இறந்தவருக்கு கொரோனா - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அச்சம்

புதுச்சேரியில் இறந்தவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்..

இறந்தவருக்கு கொரோனா - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அச்சம்
கூடப்பாக்கம் கிராமம்
  • Share this:
வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் கிராமம் தர்மபுரி நகரை  சேர்ந்தவர் கந்தசாமி. டிரைவரான இவர் கடந்த 19-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அப்போது அவருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில்  முடிவு வருவதற்குள் அவரது உறவினர்கள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசுடன் உடலை வாங்கி வந்து கடந்த 20ம் தேதி அடக்கம் செய்துவிட்டனர்.




அவரது ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறந்துபோன கந்தசாமிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பகுதி கிராம மக்கள் கொரோனா அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க...இன்று எங்கெல்லாம் மழை இருக்கு...? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்

இந்நிலையில் கந்தசாமியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்  கிராம மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading