புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 2783 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 2230 நபர்களுக்கும், காரைக்காலில் 462 நபர்களுக்கும், ஏனாமில் 68 நபர்களுக்கும், மாஹேவில் 23 நபர்களுக்கும் என மொத்தம் 2783 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 13053 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1897 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,30,392 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,45,342 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என கூறி பொது நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் 68 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.இதனால் ஏனாம் மக்கள் விழா, மலர் கண்காட்சி போன்றவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஏனாம் பிராந்திய நிர்வாகி அமன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.