காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூடப்பாக்கம் சேகர்ரெட்டியார் முதலாம் ஆண்டு நினைவு தினம் பத்துகண்ணில் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, உள்ளிட்ட கட்சியின் மாநில வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேகர்ரெட்டியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் நாராயணசாமி பேசுகையில், மறைந்த சேகர் ரெட்டியார் காங்கிரஸ் கட்சியின் மீதும் சோனியா காந்தியின் மீதும் வைத்திருந்த பற்றின் காரணமாக அவருக்கு பல்வேறு பதவிகள் வழங்கி காங்கிரஸ் அழகு பார்த்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவரது உழைப்பு போற்றுதலுக்குரியது. காங்கிரஸில் 100 பேர் மட்டுமே இருந்தாலும் நான் சாகும் வரை காங்கிரஸில் இருப்பேன் என்றார்.
கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது 4 ஆண்டுகள் பத்து மாதம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு பலர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் எல்லாம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய 3 மந்திரங்களை கையில் வைத்து ஆட்டிப் படைத்து வருகிறார்.
ALSO READ | உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. பெண் அரசியல் பிரபலம் கையால் விருது வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!
முதுகில் அழுக்கு உள்ளவன்தான் மோடிக்கு பயப்படுவார்கள் என ஆவேசமாக கூறிய நாராயணசாமி, தற்போது நடக்கும் என்.ஆர்- பாஜக கூட்டணி ஆட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும், நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம், மாநில அரசின் கடன் தள்ளுபடி மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதிக்கு வழங்குவோம் என்று அறிவித்தார்கள்.
ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை வழங்கவில்லை. புதுச்சேரியில் தற்போது முதல்வர் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். உண்மையிலேயே புதுச்சேரியை ஆளுவது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தான் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Narayana samy, PM Modi, Puducherry