புதுச்சேரி : காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்! - திமுக கூட்டணிக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு

புதுச்சேரி : காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்! - திமுக கூட்டணிக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகள் முடிந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் வேட்புமனுவையும் தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும் ஒதுக்கப்பட்டு நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் திமுகவிற்கு அதிக இடங்களை ஒதுக்கியதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

  புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். திமுகவிற்கு 13 இடங்களை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் தனித்தே நிற்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான நிர்வாகிகள் ஒரே கருத்தை முன்வைத்ததால் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  Published by:Ram Sankar
  First published: