ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது - முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி

நாராயணசாமி

ஜான் குமாரின் கடிதம் நேரடியாக கிடைத்ததும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் என, புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு பதவி விலக கோருவது நியாயமல்ல என தெரிவித்தார்.

  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சம பலத்தை பெற்றுள்ளன. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏக்கள் ஆக தேர்ந்து எடுக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான்  ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து.சுகதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணா ராவ், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

  இந்த சூழலில், காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ராஜினாமா கடித‌த்தை அளித்தார். இதனால், 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

  அதே சமயம், 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உள்ளது.  அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில்,  காங்கிரசின் ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  ஜான் குமாரின் கடிதம் நேரடியாக கிடைத்ததும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் என, புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உடனடியாக , பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 செய்தியாளருடன் அவர் நடத்திய சிறப்பு கலந்துரையாடலில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Narayana samy, Puducherry