’தமிழகம் புதுவையில், காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும்’ - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

’தமிழகம் புதுவையில், காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும்’ - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்
  • Share this:
தமிழகம், புதுச்சேரில், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தி நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் தினேஷ் குண்டுராவ், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய  தினேஷ் குண்டுராவ், மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் பேசிய அவர், “மத்தியில் பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்.. பாஜகவை ஆதரிக்காதவர்கள் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.. அரசியல் கட்சிகள் மதத்தின் அடிப்படையில் இருக்க கூடாது.. மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களுக்காக செயல்பட வேண்டும்.. இன்னும் 6 மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சியை மீண்டும் கொண்டு வர பாடுபடுவோம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினேஷ் குண்டுராவ், ”புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வரும் தேர்தலில் தொடரும். இந்தக் கூட்டணியில் தான் தற்போது நீடித்து கொண்டிருக்கின்றோம். இந்த கூட்டணி வரும் தேர்தலில் தேர்தலை சந்திக்கும். கூட்டணியில் எந்த பிரச்னையுமில்லை” என்று தெரிவித்தார்..


முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசிய போது, புதுச்சேரியின் நலத்திடட்ங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடை செய்துள்ளார்; இதனால் மக்களுக்கும் கட்சியினருக்கும் எதுவும் செய்ய முடியவில்லை என்றும்
தன் மீது 10 ஊழல் புகார்களை சிபிஐயிடம் கிரண்பேடி அளித்துள்ளார் என்றும் கூறினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை கலைக்க 26 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு நியமனம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading