• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி!

முதலமைச்சர் ரங்கசாமி

முதலமைச்சர் ரங்கசாமி

அழகிய வடிவில் அமைந்துள்ள இந்த மண்டபம் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இங்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு தொடங்கப்படும், உலக தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் 3.75 ஏக்கரில்கட்டப்பட்டு வரும் காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் முதலமைச்சராக ரங்கசாமி இருந்தபோது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகே ரூ. 14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து 2009ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்த பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014ம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது முதல் அமைச்சராக இருந்த ரங்கசாமி 2வது முறையாக காமராஜர் மணிமண்டபத்திற்கு அடிக்கடி நாட்டினார். தற்போது 90% முடிந்த நிலையில் இந்த மணிமண்டபத்தில், ஐபிஎஸ் பயிற்சி மையம், உலக தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவை  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை அதிகாரிகளுடன்  காமராஜர் மணிமண்டபம் சென்று ஆய்வு மேற்கொண்டார். மணிமண்டபம் முழுவதும் சுற்றி பார்த்த அவர், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர், காமராஜரின் எண்ணம் போன்று மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் மணிமண்டபம் அமையும்.

Also read... 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பா.ஜ.க பிரமுகர்... பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி!

காமராஜர் மணிமண்டபம் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் மணிமண்டபம் திறக்கப்படும். அழகிய வடிவில் அமைந்துள்ள இந்த மண்டபம் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இங்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு தொடங்கப்படும், உலக தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்றார்.

அரசு சார்பில் மாணவர் சேர்க்கைக்கான செண்டாக் அலுவலகம், மாணவர்களுக்கான  நூலகம், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றின் அருங்காட்சியகம் ஆகியவைகள் அமைய உள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு முதலமைச்சராக மணிமண்டபத்தை பார்வையிட வந்தேன் என கூறி புறப்பட்டு  சென்றார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: