புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

ரங்கசாமி

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரங்கசாமி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர், சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் கண்காணித்து வருவதாகவும், ஆக்சிஜனை இயற்கையாக சுவாசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரங்கசாமி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்.ரங்கசாமி நலமுடன் இருப்பதை அறிந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  .

  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்ட்ர் பக்கத்தில், கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன். பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்“ என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: