ராகுல் காந்தி முன் மீனவ பெண் பகீரங்க குற்றச்சாட்டு... மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

ராகுல் காந்தி முன் மீனவ பெண் பகீரங்க குற்றச்சாட்டு... மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

ராகுல் காந்தி - நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி தவறான தகவலை ராகுல் காந்தியிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  தன் மீதான குற்றச்சாட்டை ராகுல் காந்தியிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாற்றி மொழிப்பெயர்த்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

  புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.

  அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும் என்றும் ராகுல் காந்தி கூறினார். அதன்பின் மீனவர்களின் சிரமத்தை அவர்களிடம் கேட்டறிந்தார்.

  அப்போது பேசிய பெண் ஒருவர், எங்களின் வாழ்க்கை தரம் முன்னறவே இல்லை. அப்படியே இருக்கிறது. இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்பை சந்திக்கிறோம். நிவர் புயலின் போது பல சிரமங்களை எதிர்கொண்டோம். உங்கள் முன்னால் இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை என்று கூறினார்.



  அதற்கு அவர் என்ன கூறுகிறார் என்று முதல்வரிடம் கேட்ட போது, அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்தேன். அது குறித்து தான் கூறுகிறார்“ என்று மாற்றி மொழி பெயர்த்தார்.

  முதல்வர் நாராயணசாமி தவறான தகவலை ராகுல் காந்தியிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக-வை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: