எஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

எஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

எஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 11:40 PM IST
  • Share this:
புதுவை முதல்வர் நாராயணசாமி இது பற்றி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மறைந்த திரைப்படப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்திற்கு, பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 3 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளது என்றும் மக்கள், அரசு கூறும் கொரோனா விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். மத்திய கலாச்சாரக் குழுவில் நம் மாநில வல்லுநர்கள் இல்லாமல் இருப்பது கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது எனக் கூறியுள்ள முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசுப் பணியாளர்கள், கொரோனா தடுப்புக்குத் தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்களை வாங்க ஒருநாள் சம்பளத்தைத் தர முன்வரவேண்டும். அதேபோல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு மாத சம்பளத்தை கொரோனா பணிகளுக்குத் தரவேண்டும், என்னுடைய ஒரு மாத பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வு ஊதிய நிதியை கொரோனா தடுப்பு பணிக்கு வழங்க உள்ளேன் என்றார்.

Also read: பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


மேலும், கொரோனா நிதி, ஜிஎஸ்டி நிதி, மானியம் போன்ற எதையும் மத்திய அரசு புதுச்சேரிக்கு இதுவரை தரவில்லை என்று கூறியுள்ளார். விவசாய மசோதாக்களுக்கு எதிராக வரும் 28ம் தேதி திட்டமிட்டபடி, காங்கிரஸ் கூட்டணி சார்பாக புதுச்சேரியில் ஒன்பது இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் முதல்வர் நாராயணசாமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading