கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 975 கோடி தேவை - மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 975 கோடி ரூபாய்   வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 975 கோடி தேவை - மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை
புதுவை முதல்வர் நாராயணசாமி.
  • Share this:
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட்  மாதம் முடிவில் 6,000 பேர் அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.

நாளை அமைச்சரவை கூட்டம் கூட்டி மத்திய அரசு நீடித்துள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், மத்திய அரசு வெண்டிலேட்டர், உடை கவசம் அனுப்பி உள்ளது. இதுவரை நிதி உதவி எதுவும் வழங்கவில்லை. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 1.02 கோடி ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து 975 கோடி ரூபாய் ஒதுக்க கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Also read... கொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர்!


புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த அளவே கொரோனா நோய் தொற்று இருந்து வந்தது. இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகின்றது.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க படுக்கை வசதிகள் அதிகரிக்கபட்டு வருகின்றது எனவும் நாராயண சாமி தெரிவித்தார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading