கிரண்பேடி எழுதிய கடிதத்தின் தகவல்கள் அனைத்தும் பொய் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுவை முதல்வர் நாராயணசாமி.

கிரண்பேடி எழுதிய பகிரங்கக் கடிதத்தின் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

  • Share this:
முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் உள்ள VCRC எனப்படும் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் மூலம் தினமும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு வைத்துள்ள கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் புதுச்சேரி அரசின் கொள்கை என்று கூறிய அவர், மாணவர் விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. மாணவர்களின் உயிரோடு விளையாடாமல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Also read: செல்போன் திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்மேலும், கேஸ் மானியம் நிறுத்தத்தைக் கண்டித்ததோடு, பாஜக அரசின் தவறான கொள்கையால் இந்திய நாட்டின் பொருளாதாரம்  வீழ்ச்சியடைந்துள்ளதாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா விவகாரத்தில் முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கொரோனா தடுப்பு பணியில் உயிரைக் கொடுத்து மக்களை பாதுகாக்கப்பாடுபடுகிறோம்; ஆனால் மத்திய அரசுக்குத் தவறான தகவல்களை கிரண்பேடி அனுப்புகிறார் என்று குற்றம்சாட்டினார்.

மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கட்டளையிடுவதை கிரண்பேடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தனக்கு கிரண்பேடி எழுதிய பகிரங்கக் கடிதத்தின் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: