புதுச்சேரியில் மீண்டும் அமலுக்கு வரும் கடும் கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.
- News18 Tamil
- Last Updated: June 22, 2020, 10:40 AM IST
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவுகளை வீடியோ பதிவில் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். அதில் கூறியதாவது, தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பின்பு புதுச்சேரிக்குள் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வருவது தெரிகிறது. அதனால் அவர்கள் தங்களை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய தினந்தோறும் அதிகளவு இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது என்றார். Also see:
மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவு தேவைப்படுவதால் அவர்களின் இடங்கள் நிரப்பப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை; முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் 100 ரூபாயாக இருந்த அபராதம் இனி 200 ரூபாயாக விதிக்கப்படும், காலை 6 மணி முதல் அனைத்துக் கடைகளும் மதியம் 2 மணிவரை மட்டுமே திறந்து இருக்கும், பெட்ரோல் பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்படும், தொடர்ந்து மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உண்டு, தொழிற்சாலைகளில் 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும். விவசாயப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்படும் என்றார்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை மறுதினம் செவ்வாய் தினத்திலிருந்து கடைபிடிக்கப்பட உள்ளன. நாளை முதல் பெரிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அது செயல்படவுள்ளது.
கூட்டத்தின் முடிவுகளை வீடியோ பதிவில் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். அதில் கூறியதாவது, தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பின்பு புதுச்சேரிக்குள் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வருவது தெரிகிறது. அதனால் அவர்கள் தங்களை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய தினந்தோறும் அதிகளவு இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது என்றார்.