Home /News /national /

'5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும்' - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

'5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும்' - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

'மாணவர்களை கண்டித்து, அறிவுரை கூறி ஆசிரியர்கள் கல்வியை போதிக்க வேண்டும்' - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
5ல் வளையாதது 50ல் வளையாது என்பார்கள். 5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர்கள் 20 பேருக்கு விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தபோது நான் பார்த்துள்ளேன். திறந்த வண்டியில் அவரை அழைத்து வந்தனர் என்றார். எழுத்தறிவித்தவன் இறைவன் என கூறுவார்கள். இதனால் தான் ஆசிரியர்களை இறைவனோடு ஒப்பிடுகின்றனர். 5ல் வளையாதது 50ல் வளையாது என்பார்கள். 5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும்.

நான் விழாக்களில் பேசும்போது எப்படி பேசுகிறீர்கள்? புத்தகம் படிப்பீர்களா? என கேட்பார்கள். நான் புத்தகம் படிப்பதில்லை, நாளிதழ்கள்தான் பார்க்கிறேன். இருப்பினும் பள்ளியில் சொல்லிக்கொடுத்தவற்றை நினைவில் வைத்து பேசுகிறேன் என முதல்வர் தெரிவித்தார். மாணவர்களை கண்டித்து, அறிவுரை கூறி ஆசிரியர்கள் கல்வியை போதிக்க வேண்டும். பள்ளி கல்வி மிகவும் முக்கியமானது. இதனால் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கியுள்ளோம். கற்றல், கற்பித்தல் மையத்தை பள்ளிகளில் தொடங்கியுள்ளோம். மாணவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் தங்களின் தரத்தை உயர்த்த முடியும். வசதியில்லாதவர்கள் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர்.

ALSO READ | உத்தரப்பிரதேச ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி, 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி இலவசமாக கல்வி அளித்து வருகிறது. மாணவர்களுக்கு உணவு, உடை அளித்து வருகிறோம். ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதை செய்து வருகிறோம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, நீங்கள் அமைச்சராக வரக்கூடாது என்பதற்காகத்தான் கல்வி அமைச்சர் பதவியை அளித்துள்ளனர் என்றனர்.

நான் அப்போது எடுத்த முடிவுகள்தான் மீண்டும் அரசு அமையவே காரணமாக இருந்தது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினோம். தகுதியான ஆசிரியர்கள் பலர் வேலை பெற்றனர். சிறந்த ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு கிடைத்தனர். பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கியுள்ளோம். தற்போது ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப உள்ளோம். விரைவில் இதற்கான பணி தொடங்கும். ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் தீர்ப்போம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி