Home /News /national /

புதுச்சேரியில் ரூ. 6312 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்... காங் - திமுக வெளிநடப்பு

புதுச்சேரியில் ரூ. 6312 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்... காங் - திமுக வெளிநடப்பு

காங் - திமுக வெளிநடப்பு

காங் - திமுக வெளிநடப்பு

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ல் நடந்தது. அக்கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது.

  • News18
  • Last Updated :


புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாத அரசை கண்டித்து திமுக-காங் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ல் நடந்தது. அக்கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. இதில்  இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.


ஏப்ரல்-ஜூலை வரை 3612 ருபாய்க்கான இடை கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது திமுக-காங் எம்எல்ஏக்கள் எழுந்து  எதிர்ப்பு தெரிவித்தனர். முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வலியுறுத்தினார்கள்.இளைஞர்களின் வேலைவாய்ப்பு எங்கே,
பிரதமர் அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி என்னாச்சு, நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும், மாநில அந்தஸ்து என்னாச்சு, மேகதாது பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தும் பேனர்களை ஏந்தி  திமுக-காங் வெளிநடப்பு செய்தனர்.


இதனை தொடர்ந்து சட்ட முன்வரைவுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 2021-22 ம் ஆண்டிற்கான முன்னளி மானியத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்டே தாக்கலாகிறது. இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டே.


தொடர்ந்து அவையில் உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது மத்திய  அரசின் ஆயுஷ்மான் திட்டம் ஒரு ஏமாற்று திட்டம்  என  பேரவையில் திமுக குற்றச்சாட்டினார். புதுச்சேரியில் நடைமுறையில் இருந்த பொதுமக்களின் உயிர்காக்கும்  மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறுத்தியது ஏன்? அதற்கு பதிலான ஆயுஷ்மான் திட்டம் புதுச்சேரியில்  தோல்வியடைந்துவிட்டது.


ஆயுஷ்மான் திட்டம் ஒரு ஏமாற்று திட்டம் என திமுக சட்டமன்ற  உறுப்பினர் நாஜிம்  பேரவையில்  குற்றச்சாட்டினார். எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, தமிழகத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்த மருத்துவமனைகளில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என்ற நிலை உள்ளது.




ஆனால் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், பயனாளிகள் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியாத சூழல்தான் நிலவி வருவதாக குற்றசாட்டினார். சுயேட்சை எம்.எல்.ஏ PR.சிவா பேசுகையில், முதலமைச்சரை தனிமைப்படுத்தி செயல்படாத அளவிற்கு தலைமை செயலரை வைத்து பாஜக முடக்குவதாகவும், அவரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பு மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என பேசினார்.


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூண்டு கிளியாய் இருக்கிறார். நிம்மதியாக ஆட்சி செய்கிறேன் என முதல்வர் ரங்கசாமி நெஞ்சை தொட்டு சொல்லட்டும் என சட்டசபையில் திமுக எம்எல்ஏ நாஜிம் பேசினார். சுயேட்சை எம்.எல்.ஏ PR.சிவா பேசுகையில், முதலமைச்சரை தனிமைப்படுத்தி செயல்படாத அளவிற்கு தலைமை செயலரை வைத்து பாஜக முடக்குவதாகவும், அவரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும் என கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி