புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.3000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ரங்கசாமி

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக, புதுச்சேரியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. நாள்தோறும் சராகரியாக 2000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சராசரியாக நாள்தோறும் 30 பேர் மரணமடைகின்றனர். புதுச்சேரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கால் அன்றாட கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து ரேஷன்கார்டுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்திருந்தனர். முதல்வர் ரங்கசாமி கொரோனா சிகிச்சை பெற சென்றதால் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.இந்நிலையில், இன்று சட்டசபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி தலைமை செயலர்  மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு ஒரு கோப்புடன் சென்றார். அந்த கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க... Puducherry : புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு...

இதனையடுத்து சட்டமன்றத்தில் தனது அலுவலகத்திற்கு வந்த முதல்வர், கொரோனா நிவாரண நிதியை அறிவித்தார்.
அனைத்து குடும்பங்களுக்கும் தலா 3000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் 3,50,000குடும்பங்கள் பயன்பெறும் என அறிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: