புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துகோரி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து - நாராயணசாமி

நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துகோரி தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு தரவில்லை எனில் என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்கும் என ரங்சாமி கூறி உள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. புதுச்சேரி மாநிலத்தின் அதிகாரத்தை மத்தியில் உள்ள மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி வருகிறது.

  மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கிரண்பேடி தடையாக உள்ளார். அதற்கு உறுதுணையாக நரேந்திர மோடி அரசும் உள்ளது. மாநில அந்தஸ்து பிரச்னையை தேர்தல் வரும்போதுதான் ரங்கசாமி எடுப்பார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. ஆனால் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனை ஏற்போம்’ என்று தெரிவித்தார்.

  புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையை கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: