Home /News /national /

சுற்றுலாப் பயணிகளிடம் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்: காவல்துறைக்கு உத்தரவிட்ட புதுச்சேரி முதல்வர்

சுற்றுலாப் பயணிகளிடம் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்: காவல்துறைக்கு உத்தரவிட்ட புதுச்சேரி முதல்வர்

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    புத்தாண்டு தினத்தைக் கொண்டாட புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டு தின கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பணிகள் குறித்து புதுச்சேரி ஆட்சியர் அருண், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழு, மருத்துவக் குழு ஆகியவை தயார் நிலையில் இருக்கும்...புதுச்சேரி நகரின் White town பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Also see:


     
    Published by:Karthick S
    First published:

    Tags: Narayana samy

    அடுத்த செய்தி